மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் செந்துறை அரசு பெண்கள் பள்ளி முதலிடம்
செந்துறையில் நடந்த மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் செந்துறை அரசு பெண்கள் பள்ளி முதலிடம் பெற்றது.
குத்துச்சண்டை போட்டி
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மண்டல அளவிலான பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், அரியலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து ஒரு தனியார் பள்ளி, உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் இருந்து செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 2 தனியார் பள்ளிகள், கரூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 4 தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு அரசு பள்ளியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
செந்துறை பள்ளி முதலிடம்
14, 17, 19 வயது என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்து பிரிவுகளிலும் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தை வென்று சாதனை படைத்தனர். 2-ம் இடத்தை கரூர் கல்வி மாவட்ட பள்ளி மாணவிகளும், 3-ம் இடத்தை பெரம்பலூர் கல்வி மாவட்ட பள்ளி மாணவிகளும், 4-ம் இடத்தை அரியலூர் கல்வி மாவட்ட பள்ளி மாணவிகளும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த குத்துச்சண்டை போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்தை பெற்ற மாணவிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) விழுப்புரத்தில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

No comments:
Post a Comment